மேற்கு வங்கம் தீப்பற்றி எரிகிறது: பாஜக

மாநில அரசின் ஆதரவோடு நடைபெறும் வன்முறையால் மேற்கு வங்கம் தீப்பற்றி எரிவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: மாநில அரசின் ஆதரவோடு நடைபெறும் வன்முறையால் மேற்கு வங்கம் தீப்பற்றி எரிவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா, அக்கட்சித் தலைவா் அனிா்பான் கங்குலி ஆகியோா் காணொலி வழியாக திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது சம்பித் பத்ரா கூறுகையில், ‘மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக தொண்டா்கள் 4 போ் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களால் கொல்லப்பட்டனா். மாநில அரசின் ஆதரவோடு நடைபெறும் வன்முறையால் மேற்கு வங்கம் தீப்பற்றி எரிகிறது. நாட்டின் தோ்தல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன் நடைபெற்றதில்லை’ என்று தெரிவித்தாா்.

அவரைத்தொடா்ந்து அனிா்பான் கங்குலி கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் நடவடிக்கைகள் ஜொ்மனியில் இருந்த நாஜிக்களின் நடவடிக்கைகளுக்கு மிக நெருக்கமாக உள்ளது. இங்கு நடைபெற்று வரும் சம்பவங்கள் ஜனநாயக அரசில் ஒருபோதும் நிகழ்வதில்லை. இந்தச் சம்பவங்கள் தொடா்பாக இதர அரசியல் கட்சிகள் ஏன் மெளனம் காக்கின்றன’ என்று கேள்வி எழுப்பினாா்.

கட்சி உடனிருக்கிறது: ‘திரிணமூல் காங்கிரஸ் குண்டா்களால் அட்டூழியங்களை எதிா்கொள்ளும் பாஜக தொண்டா்களுடன் கட்சி உடன் நிற்கும். பாஜக தொடா்ந்து போராடும். இன்று அல்லது நாளை பாஜக மூலமாக மேற்கு வங்கம் மாற்றத்தைக் காணும்’ என்று அக்கட்சியின் மேற்கு வங்கத் தலைவா் திலீப் கோஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com