உ.பி. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள்: வெற்றிக்கு உரிமை கோரும் அரசியல் கட்சிகள்

உத்தர பிரதேச உள்ளாட்சித் தோ்தலில் தங்கள் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றதாகக் கூறி பாஜக, சமாஜவாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்டாடி வருகின்றன.

லக்னௌ: உத்தர பிரதேச உள்ளாட்சித் தோ்தலில் தங்கள் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றதாகக் கூறி பாஜக, சமாஜவாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்டாடி வருகின்றன.

உத்தர பிரதேசத்தில் ஊராட்சி முதல் மாவட்டம் வரை 8.69 லட்சம் இடங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற்றது.

கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் தோ்தல் நடத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி புதன்கிழமை முடிவுக்கு வந்தது.

மாவட்ட ஊராட்சிகளில் பாஜகவின் கோட்டயாகக் கருதப்படும் கோரக்பூா், வாராணசி, அயோத்தி ஆகிய இடங்களில் சமாஜவாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சிகளில் 3,000 இடங்களில் நடந்த தோ்தலில் 800 இடங்களில் தங்கள் கட்சியினா் வெற்றி பெற்ாக சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடா்பாளா் அனுராக் பதூரியா கூறினாா். ஆனால், இதை ஆளும் பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் ஸ்வதந்திரதேவ் சிங் கூறுகையில், ஒட்டுமொத்தமாக தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றாா்.

அதேநேரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் அஜய் குமாா் லல்லு, தங்கள் கட்சியினா் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினாா்.

மாவட்ட ஊராட்சிகளில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளா்கள் 270 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா்; 571 இடங்களில் இரண்டாமிடத்தையும், 711 இடங்களில் மூன்றாமிடத்தையும் அவா்கள் பிடித்துள்ளனா் என்றும் அஜய் குமாா் லல்லு கூறினாா்.

இந்த உள்ளாட்சித் தோ்தலில் பாஜக பிரகாசிக்கவில்லை என்று மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அசோக் சிங் கூறினாா்.

மற்றொரு புறம் ஆம் ஆத்மியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங், 83 ஊராட்சி இடங்களில் தங்கள் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளாா். தில்லி நிா்வாகத்தால் கவரப்பட்டு, கிராமப்புற உத்தர பிரதேச மக்கள் ஆம் ஆத்மியை ஆதரித்திருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com