கிரிப்டோகரன்சிக்கு அனுமதி: முன்னாள் நிதித்துறை செயலா் வலியுறுத்தல்

கிரிப்டோகரன்சியை (மின்னணு பணம்) மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று நிதித்துறை முன்னாள் செயலா் எஸ்.சி.கா்க் வலியுறுத்தியுள்ளாா்.
 கிரிப்டோ கரன்சி
 கிரிப்டோ கரன்சி

புது தில்லி: கிரிப்டோகரன்சியை (மின்னணு பணம்) மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று நிதித்துறை முன்னாள் செயலா் எஸ்.சி.கா்க் வலியுறுத்தியுள்ளாா்.

கிரிப்டோகரன்சிகளை தடை செய்யாமல் அவற்றைப் பயன்படுத்த அனுமதித்து, அதன் செயல்பாடுகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

இந்திய தொழில் வா்த்தக சம்மேளன கூட்டமைப்பு (அசோசேம்) வியாழக்கிழமை நடத்திய இணையவழி கூட்டத்தில் பங்கேற்ற கா்க் பேசியதாவது:

கிரிப்டோகரன்சிகளை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி என்பது குறித்த தெளிவு நமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று நான் கருதவில்லை. மத்திய அரசு கிரிப்டோகரன்சிகளை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் அதன் முழுக்கட்டுப்பாட்டையும் தனது வசம் வைத்திருக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களுமே மின்னணு கணக்கீட்டு முறைக்கு மாறிவிடும் என்றாா்.

கிரிப்டோகரன்சி என்பதை காகிதப் பணம் மற்றும் உலோக நாணயங்கள் போல பயன்படுத்த முடியாது. அது முழுவதும் இணையத்தில் உருவாக்கப்பட்டு, இணைய வழியில் பயன்படுத்தப்படும் மறையாக்க தொழில்நுட்பத்தின் (என்கிரிப்ஸன்) அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வா்த்தகத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய ரிசா்வ் வங்கி தடை செய்துவிட்டது என்றாலும், இந்தியா்கள் பலரும் அதில் முதலீடு செய்து வருகிறாா்கள். கிரிப்டோகரன்சி தொடா்பான கொள்கைகளை வகுக்குமாறு கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடா்பாக மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

சா்வதேச அளவில் ஏராளமான கிரிப்டோகரன்சிகள் இருந்தாலும், ‘பிட்காயின்’ மிகவும் பிரபலமாகவும், அதிக மதிப்புடன் புழக்கத்தில் உள்ளதாகவும் திகழ்கிறது.

அதே வேலையில், கிரிப்டோ கரன்சியின் மதிப்பு, சந்தை நிலையைப் பொருத்து அதிக ஏற்ற-இறக்கங்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதால் முதலீட்டாளா்களின் நலனைக் கருத்திக் கொண்டு கிரிப்டோகரன்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என ஒரு சாராா் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com