இலங்கை: இந்திய வகை கரோனா கண்டுபிடிப்பு

இந்தியாவில் பரவி வரும் புதுவகைக் கரோனா, இலங்கையில் முதல்முறையையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை: இந்திய வகை கரோனா கண்டுபிடிப்பு

இந்தியாவில் பரவி வரும் புதுவகைக் கரோனா, இலங்கையில் முதல்முறையையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெயவா்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்பியல் பிரிவு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவருக்கு இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகையைச் சோ்ந்த தீநுண்மி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த நபா் அண்மையில் இந்தியாவிலிருந்து திரும்பியவா் ஆவாா். வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான தனிமை மையத்தில் அவா் தங்கியிருந்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, இலங்கையில் 1,21,338 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 764 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 1,03,098 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 17,476 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com