மும்பையில் 2-வது நாளாக கோவேக்ஸின் தட்டுப்பாடு: மக்கள் அதிருப்தி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2-வது நாளாக கோவேக்ஸின் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மும்பையில் 2-வது நாளாக கோவேக்ஸின் தட்டுப்பாடு: மக்கள் அதிருப்தி
மும்பையில் 2-வது நாளாக கோவேக்ஸின் தட்டுப்பாடு: மக்கள் அதிருப்தி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2-வது நாளாக கோவேக்ஸின் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

முதல் தவணை கோவேக்ஸின் போட்டுக்கொண்ட பயனாளர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு கோவேக்ஸின் இல்லை என்பதால் மாவட்ட நிர்வாகத்தின் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.  

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அறிவுரையின்படி கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே மும்பையில் கடந்த இரண்டு நாள்களாக கோவேக்ஸின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய மக்கள் அதிருப்தியுடன் வீடு திரும்புகின்றனர். 

ஒரு சில இடங்களில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு அறிவுரையின்படி கோவேக்ஸின் தடுப்பூசிக்கு 4 முதல் 6 வாரங்கள் இடைவெளிக்கு பிறகு இரண்டாம் கட்ட தடுப்பூசி போட வேண்டும். கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு 4 முதல் 8 வாரங்கள் கழித்து இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டும்.

ஆனால் தற்போது இருப்பிலுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டபோது மும்பை சுகாதாரத் துறை எந்தவித பதிலையும் அளிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com