14 மாநிலங்களுக்கு கோவேக்ஸின் நேரடி விற்பனை

நாட்டில் 14 மாநிலங்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி நேரடியாக விற்பனை செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 
14 மாநிலங்களுக்கு கோவேக்ஸின் நேரடி விற்பனை

நாட்டில் 14 மாநிலங்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி நேரடியாக விற்பனை செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மத்திய அரசு முன்னுரிமை அளித்து ஒதுக்கியுள்ள மாநிலங்களின் பட்டியல் அடிப்படையில் கோவேக்ஸின் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

ஹைதராபாத் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் சுசித்ரா எள்ளா இதனை உறுதி செய்துள்ளார். 

அதன்படி ஆந்திரம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழகம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கோவேக்ஸின் நேரடி விற்பனை செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com