மேற்கு வங்கம்: ரம்ஜான் நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டும் அனுமதி

மேற்கு வங்கத்தில் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓரிடத்தில் 50 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
முதல்வர் மம்தா பானர்ஜி
முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓரிடத்தில் 50 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இந்த ஆண்டு கொல்கத்தாவில் ரெட் சாலையில் ஈத் பிரார்த்தனை கூட்டம் நடைபெறாது. அதிகபட்சமாக மத மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எனவே முடிந்தவரை வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்யுங்கள். பெரிய கூட்டங்கள் எதுவும் நடத்த வேண்டாம் என்று முஸ்லீம் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து மாநில செயலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com