இந்தியாவில் இதுவரை 17.52 கோடி பேருக்கு தடுப்பூசி; 30 கோடி பரிசோதனை!

நாட்டில் இதுவரை 17.52 கோடி பேருக்கு தடுப்பூசியும், 30 கோடிக்கு மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இந்தியாவில் இதுவரை 17.52 கோடி பேருக்கு தடுப்பூசி; 30 கோடி பரிசோதனை!

 
புதுதில்லி: நாட்டில் இதுவரை 17.52 கோடி பேருக்கு தடுப்பூசியும், 30 கோடிக்கு மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,33,40,938 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,205 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,54,197 ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 37,04,099 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றிலிருந்து இன்று 3,55,338 குணமடைந்த நிலையில் இதுவரை 1,93,82,642 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்ட் தடுப்பூசியை இதுவரை 17 கோடியே 52 லட்சத்து 35 ஆயிரத்து 991 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.  ஒரே நாளில் 24.46 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 66.61 லட்சம் பேர் போட்டுக் கொண்டுள்ளனா்.   

அதேசமயம்  இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 11 -ஆம் தேதி வரை 30,75,83,991 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று செவ்வாய்கிழமை ஒரேநாளில் 19,83,804 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

நாட்டின் மொத்த மக்கள் தொகை 135 கோடி. கரோனாவுக்கான குழு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க நாட்டில் 70 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டிய நிலையில்,  இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசியின் கணக்கீட்டின்படி பார்த்தால் மீதம் சுமார் 187 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டியுள்ளது. தற்போதைய வேகத்திலே தடுப்பூசிகள் போடப்பட்டால் 70 சதவீதம் மக்களை சென்றடைய குறைந்தது இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும். 

இதனிடையே தற்போது வழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள், இனிவரவிருக்கும் உருமாறிய கரோனாவுக்கு எதிராக செயல்படாமல் போகலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com