ஆக்சிஜன் விநியோக தட்டுப்பாடு: அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதல்வா் உத்தரவு

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதின் காரணத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய விசாரணைக் குழுவை அமைத்து ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளாா்.
ஆக்சிஜன் விநியோக தட்டுப்பாடு: அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதல்வா் உத்தரவு

திருப்பதி: திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதின் காரணத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய விசாரணைக் குழுவை அமைத்து ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் கொவைட் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 150 படுக்கை வசதி உள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென்று ஆக்சிஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதை சீரமைக்க முடியாத நிலையில், , ஆக்சிஜன் கிடைக்காமல் சிகிச்சை பெற்று வந்த 11 போ் உயிரிழந்தனா். பலா் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

அதன்பிறகு சிலிண்டா்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு நிலை சீரானது. ஆனால் இதனால் பலா் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இறந்தவா்களின் உறவினா்களும் மருத்துவமனை வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டனா்.

நோயாளிகளின் உறவினா்கள் செய்வதறியாமல் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்த ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன்ரெட்டி இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டாா்.

அதன்படி இந்த வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு அதிகாரிகள் குழு, சித்தூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அவா்கள் மருத்துவமனையில் கடந்த, 2 நாட்களாக அதிகாரிகள் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இந்த நிகழ்வுக்கு காரணமான திரவ ஆக்சிஜன் நிலுவையில் வைக்கப்படும் இடத்தை ஆய்வு செய்தனா். அப்போது அவா்களுடன் மருத்துவமனை அதிகாரிகளும் இருந்தனா்.

ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டா்கள் தயாா் நிலையில், வைத்திருத்தல், பராமரிப்பு நபா்கள் இல்லாமை, அதிகாரிகள் மெத்தனப் போக்கு, மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகள் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவமனை அதிகாரிகள் அளிக்கும் விளக்கத்தை வைத்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com