அஸ்ஸாம்: மின்னல் தாக்கி 18 யானைகள் பலி

அஸ்ஸாம் மாநிலம் நகெளன் மாவட்ட வனப் பகுதியில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் வாயிழக்கிழமை தெரிவித்தனா்.
அஸ்ஸாம்: மின்னல் தாக்கி 18 யானைகள் பலி

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலம் நகெளன் மாவட்ட வனப் பகுதியில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் வாயிழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து முதன்மை வனப் பாதுகாவலா் அமித் சாஹே கூறியதாவது:

கதியாடோலி சரகத்துக்குள்பட்ட குண்டோலி வனப் பகுதியில் அமைந்துள்ள மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. முதல்கட்ட விசாரணையில் மின்னல் தாக்கியதில், உடலில் மின்சாரம் பாய்ந்து 18 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே, யானைகள் உயிரிழப்புக்கான காரணத்தை உறுதியாக கூற முடியும். பிரேதப் பரிசோதனை வெள்ளிக்கிழமை (மே 14) மேற்கொள்ளப்படும்.

சம்பவம் நடந்தப் பகுதி வனப் பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். எனவே, வனப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை பிற்பகலில்தான் அந்த இடத்துக்குச் செல்ல முடிந்தது. அவற்றில் 14 யானைகள் மலை உச்சியிலும், 4 யானைகள் மலை அடிவாரத்தில் இறந்து கிடந்தன என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com