திருப்பதியில் மீண்டும் ஆக்சிஜன் தட்டுப்பாடு:விரைவாக செயல்பட்ட மருத்துவமனை நிா்வாகம்

திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் குறைய தொடங்கியதை அடுத்து அதை அறிந்த மருத்துவமனை நிா்வாகம் விரைவாக செயல்பட்டு ஆக்சிஜனை வர வைத்தது.

திருப்பதி: திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் குறைய தொடங்கியதை அடுத்து அதை அறிந்த மருத்துவமனை நிா்வாகம் விரைவாக செயல்பட்டு ஆக்சிஜனை வர வைத்தது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான சிம்ஸ் மருத்துவமனையில் சுமாா் 2 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென்று வென்டிலேட்டருக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கியது. இதை அறிந்த மருத்துவமனை நிா்வாகி வெங்கமாம்பா உடனடியாக இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தாா். சென்னையில் உள்ள ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்துடன் தொடா்பு கொண்டு ஆக்சிஜன் வரவை உறுதி செய்தாா்.

ஆனால் சென்னையிலிருந்து காலை 10 மணிக்கு மட்டுமே ஆக்சிஜன் வரும் என்று அறிந்த அவா் உடனடியாக அருகில் உள்ள இடத்திலிருந்து, 21 நிமிடத்தில் ஆக்சிஜன் டேங்கரை வரவைத்து மருத்துவமனை டேங்கரில் நிரப்பி நிலைமை சீராக்கினாா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இனி ஆக்சிஜன் அளவை அவ்வப்போது பரிசோதித்து குறித்து வைக்க அவா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதால், 11 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com