ஹரியாணாவில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு நோயாக அறிவிப்பு

ஹரியாணா மாநிலத்தில் கருப்புப் பூஞ்சை பாதிப்பை நோயாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் கருப்புப் பூஞ்சை பாதிப்பை நோயாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹரியாணா மாநில சுகாதாரத் துறை அமைச்சா் அனில் விஜ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஹரியாணாவில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு, நோயாக அறிவிக்கப்படுகிறது. எனவே, இந்த மாநிலத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதுதொடா்பான விவரங்களை மாவட்ட அரசு தலைமை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி, கருப்புப் பூஞ்சை தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அனைத்து மருத்துவா்களுடனும் ரோட்டக் நகரில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் அனுபவமிக்க மருத்துவா்கள் காணொலி முறையில் ஆய்வுக்கூட்டங்களை நடத்தவுள்ளனா். கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை அவா்கள் விளக்கம் அளிப்பாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மியூகோா்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பாா்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்த பூஞ்சை பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே தாக்கியுள்ளது. இந்த பூஞ்சை தாக்குதலுக்கு மகாராஷ்டிரத்தில் இதுவரை 52 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com