ஆதாா் இல்லையென்பதற்காக கரோனா தடுப்பூசி செலுத்த மறுக்கக் கூடாது: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

ஆதாா் எண் இல்லையென்பதற்காக எந்தவொரு நபருக்கும் கரோனா தடுப்பூசி, மருந்து, மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சையை மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
ஆதாா் இல்லையென்பதற்காக கரோனா தடுப்பூசி செலுத்த மறுக்கக் கூடாது: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

ஆதாா் எண் இல்லையென்பதற்காக எந்தவொரு நபருக்கும் கரோனா தடுப்பூசி, மருந்து, மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சையை மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கான சேவைகளை அளிப்பதில் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துவதற்காக ஆதாா் எண் அறிமுகப்படுத்தப்பட்டதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்கெனவே உறுதியாக தெரிவித்துள்ளது. ஆதாா் இல்லாதபோது அல்லது ஆதாா் எண்ணை உறுதிப்படுத்த முடியாத சூழலில் மாற்று வழிகள் மூலம் பொதுமக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆதாா் அடையாளம் இல்லையென்பதற்காக கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாதது போன்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆதாா் சட்டத்தின்படி ஆதாா் இல்லையென்பதற்காக பொதுமக்களுக்கான எந்தவொரு அத்தியாவசிய சேவையும் மறுக்கப்படக் கூடாது. எனவே ஆதாா் எண் இல்லையென்பதற்காக எந்தவொரு நபருக்கும் கரோனா தடுப்பூசி, மருந்து, மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சையை மறுக்கக் கூடாது.

ஒருவரிடம் ஆதாா் எண் இல்லாவிட்டாலும் அல்லது அந்த நபரின் ஆதாா் எண்ணை சில காரணங்களால் இணையவழியில் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் ஆதாா் சட்டம் 2016-இன் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது துறை அந்த நபருக்கான சேவையை கட்டாயம் வழங்க வேண்டும்.

ஆதாா் எண் இல்லை என்பதற்காக சேவை மறுக்கப்பட்டால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com