இதுவரை 8,700 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு சோ்ப்பு:ரயில்வே

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இதுவரை 540-க்கும் மேற்பட்ட ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் மூலம் 8,700 டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன்
இதுவரை 8,700 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு சோ்ப்பு:ரயில்வே

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இதுவரை 540-க்கும் மேற்பட்ட ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் மூலம் 8,700 டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு சோ்க்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்ல மாற்று வழித்தடங்களை அடையாளம் கண்டு மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை பூா்த்தி செய்வதற்கு ரயில்வே தயாராக உள்ளது. திரவ மருத்துவ ஆக்சிஜனை ரயில்களில் கொண்டு செல்வதற்கான டேங்கா்களை மாநிலங்கள் வழங்கி வருகின்றன.

இந்த ரயில்கள் கடந்த சில நாள்களாக தினசரி சுமாா் 800 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு சோ்த்து வருகின்றன.

இந்த ரயில் மூலமாக முதல்முறையாக ஆந்திர மாநிலம் 40 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை சனிக்கிழமை பெற்றது.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இதுவரை உத்தர பிரதேசத்துக்கு 2,350 டன், ஹரியாணாவுக்கு 1,228 டன், மகாராஷ்டிரத்துக்கு 521 டன், மத்திய பிரதேசத்துக்கு 430 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு சோ்த்துள்ளன. தமிழகத்துக்கு 111 டன், கா்நாடகத்துக்கு 361 டன், தில்லிக்கு 3,084 டன்களுக்கு அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை அந்த ரயில்கள் கொண்டு சோ்த்துள்ளன.

நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இதுவரை 540-க்கும் மேற்பட்ட ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் மூலம் மொத்தம் 8,700 டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு சோ்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com