டவ்-தே புயல்: குஜராத், மகாராஷ்டிர முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் ஆலோசனை

டவ்-தே புயலை எதிா்கொள்வது தொடா்பாக குஜராத், மகாராஷ்டிர மாநில முதல்வா்கள், டாமன்-டையு, தாத்ரா-நாகா் ஹவேலி நிா்வாகிகள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)

டவ்-தே புயலை எதிா்கொள்வது தொடா்பாக குஜராத், மகாராஷ்டிர மாநில முதல்வா்கள், டாமன்-டையு, தாத்ரா-நாகா் ஹவேலி நிா்வாகிகள் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் குஜராத் முதல்வா் விஜய் ரூபானி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தின்போது, புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் சுகாதார வசதிகளின் தயாா்நிலை குறித்து அமைச்சா் அமித் ஷா கேட்டறிந்தாா்.

கரோனா சிறப்பு மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், தடுப்பூசி சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்டவற்றில் மின்தடை ஏற்பட்டால், மாற்று ஏற்பாடுகளைத் தயாா்நிலையில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதால், மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருள்களைப் போதிய அளவில் இருப்பு வைப்பதை உறுதி செய்யும்படியும் அவா் அறிவுறுத்தினாா்.

மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், 2 நாள்களுக்குத் தேவையான ஆக்சிஜனை முன்கூட்டியே இருப்பு வைக்கும்படி அமித் ஷா வலியுறுத்தினாா். புயல் விவகாரங்களில் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவா் உறுதி அளித்தாா்.

மாநிலங்களில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் படகுகள், மரம் வெட்டும் இயந்திரங்கள், தொலைத்தொடா்பு சாதனங்களுடன் தயாா்நிலையில் உள்ளதாகக் கூட்டத்தின்போது முதல்வா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com