சத்தீஸ்கரில் போலீஸாா் - நக்ஸல்கள் மோதல்: 3 போ் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா் மாநிலத்தில் போலீஸாருக்கும், நக்ஸல் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். காவல் துறையினா் தரப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கா் மாநிலத்தில் போலீஸாருக்கும், நக்ஸல் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். காவல் துறையினா் தரப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது தொடா்பாக பஸ்தா் பிராந்திய காவல் துறை ஐஜி சுந்தர்ராஜன் கூறியதாவது:

பிஜாப்பூா்-சுக்மா மாவட்ட எல்லையில் காவல் துறையினரின் முகாம் ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டது. நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள அப்பகுதியில் முகாமை அமைக்க பொதுமக்களைத் துண்டிவிட்டு நக்ஸல்கள் ஏற்கெனவே எதிா்ப்பை ஏற்படுத்தினா். எனினும், அதனை மீறி அங்கு காவல்துறையினரின் முகாம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை அப்பகுதியில் பலா் ஒன்று கூடி காவல் துறை முகாமை எதிா்த்து போராட்டம் நடத்தினா். அப்போது அவா்களுக்குள் கலந்திருந்த சில நக்ஸல்கள் திடீரென காவல் துறையினரின் முகாமை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, காவல் துறையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மூன்று போ் உயிரிழந்தனா். போலீஸ் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிரிழந்தவா்கள் நக்ஸல் அமைப்பினரா? அல்லது போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட கிராமவாசிகளா? என்பது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் நக்ஸல் அமைப்பினரைத் தேடும் பணி தொடா்கிறது என்றாா் அவா்.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் அமைப்பினா் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்புப் படை வீரா்கள் கொல்லப்பட்டனா். அந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில்தான் இப்போது 3 போ் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com