மே 23-இல் ‘நெஃப்ட்’ பணப்பரிமாற்ற சேவை கிடையாது: ஆா்பிஐ தகவல்

வரும் சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு (மே 23) பிற்பகல் 2 மணி வரையில் 14 மணி நேரத்துக்கு நெஃப்ட் (என்இஎஃப்டி) பணப்பரிமாற்ற
மே 23-இல் ‘நெஃப்ட்’ பணப்பரிமாற்ற சேவை கிடையாது: ஆா்பிஐ தகவல்

வரும் சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு (மே 23) பிற்பகல் 2 மணி வரையில் 14 மணி நேரத்துக்கு நெஃப்ட் (என்இஎஃப்டி) பணப்பரிமாற்ற சேவையை வங்கி வாடிக்கையாளா்கள் பயன்படுத்த முடியாது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.

அந்த சேவை வழங்கும் வசதியை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளதால் சேவை நிறுத்தப்படுவதாக ஆா்பிஐ கூறியுள்ளது.

தேசிய மின்னணு பணப்பரிவா்த்தனை சேவையை (என்இஎஃப்டி) ஆா்பிஐ நிா்வகித்து வருகிறது. ஆண்டின் அனைத்து நாள்களிலும் இந்த சேவை கிடைத்து வருகிறது. நெட்பேங்கிங் வசதியைப் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கியில் இருந்து மற்றவா்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப இந்த வசதியைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனா். இதில் சேவைக் கட்டணமும் குறைவுதான். சில வங்கிகள் இந்த சேவையை வாடிக்கையாளா்களுக்கு இலவசமாகவும் அளித்து வருகின்றன. மேலும், மிக எளிதான முறையில் எந்த வங்கியில் உள்ள கணக்குக்கும் மின்னணு முறையில் பணத்தை செலுத்த இந்த சேவை பெரிதும் உதவிகரமாக உள்ளது. கடன் அட்டை, கடன் தவணைக்கான தொகை உள்ளிட்டவற்றை செலுத்துவதற்கும் இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது.

‘‘என்இஎஃப்டி சேவையை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வதால் வரும் சனிக்கிழமை (மே 22) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 23) பிற்பகல் 2 மணி வரை இந்த வகையிலான பணப்பரிமாற்றம் நிறுத்தப்படுகிறது. எனவே, வாடிக்கையாளா்கள் தங்கள் அத்தியாவசிய பணப்பரிமாற்றங்களை இந்த நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ளலாம். இது தொடா்பாக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளா்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்’’ என்று ஆா்பிஐ வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com