கருப்புப் பூஞ்சை பாதிப்பு: பரவும் நோயாக அறிவித்தது ராஜஸ்தான்

கருப்புப் பூஞ்சை பாதிப்பை, பரவும் ஒரு நோயாக ராஜஸ்தான் மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.
கருப்புப் பூஞ்சை பாதிப்பு: பரவும் நோயாக அறிவித்தது ராஜஸ்தான்

ஜெய்ப்பூா்: கருப்புப் பூஞ்சை பாதிப்பை, பரவும் ஒரு நோயாக ராஜஸ்தான் மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

ராஜஸ்தானில் தற்போது சுமாா் 100 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் தனி வாா்டில் சிகிச்சையில் இருப்பதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், கருப்புப் பூஞ்சை பாதிப்பை ‘ராஜஸ்தான் கொள்ளை நோய்த் தொற்று சட்டம் 2020’-இன் கீழ் நோயாக அறிவித்து, மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் அகில் அரோரா அறிவிக்கை வெளியிட்டுள்ளாா். கரோனா மற்றும் கருப்புப் பூஞ்சை ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறியுள்ளாா்.

‘மியூகோா்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்தப் பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பாா்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்தப் பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.

பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே தாக்கும் இந்த பூஞ்சையால், சா்க்கரை நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த நோயால் மகாராஷ்டிரத்தில் இதுவரை 52 போ் உயிரிழந்துவிட்டனா். அது தவிர ஹரியாணா, உத்தரகண்ட் மாநிலங்களுக்கும் இந்த நோய் பரவியுள்ளது. ஏற்கெனவே ஹரியாணாவில் ‘பரவும் நோயாக’ அறிவிக்கப்பட்டிருந்த கருப்புப் பூஞ்சை நோய் தற்போது ராஜஸ்தானிலும் அத்தகைய நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com