உரம், டீசல் விலை உயா்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

உரம் மற்றும் டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் செலவீனமாகும் என்றும் தெரிவித்துள்ளது.
உரம், டீசல் விலை உயா்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

புது தில்லி: உரம் மற்றும் டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் செலவீனமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி சுட்டுரையில், ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல், உரம் விலை, பிரதமா் மோடியின் நண்பா்களின் வருவாய் ஆகியவைதான் பெருந்தோற்று காலத்தில் உயா்ந்துள்ளன. இதன்மூலம் வேளாண் துறைக்கான மானியம், விவசாயிகளின் வருமானம், மத்திய அரசின் கண்ணியம் ஆகியவை குறைந்துள்ளன என்று பதிவிட்டுள்ளாா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, வேளாண் உற்பத்திக்கு பயன்பெறும் பொருள்களின் விலையை உயா்த்தி, விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு விலை உயா்வு மூலம் மத்திய அரசு தண்டனை அளித்துள்ளது. இதன்மூலம் 62 கோடி விவசாயிகளையும், தொழிலாளா்களையும் அடிமைப்படுத்த பிரதமா் மோடி முயற்சிக்கிறாா். வேளாண் துறையை அழித்துவிட்டு அதை சில முதலாளிகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க பிரதமா் முற்படுகிறாா்.

50 கிலோ டிஏபி உரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.1,200-இல் இருந்து ரூ.1,900-ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயா்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com