மம்தாவுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும்: காங்கிரஸ்  மூத்த தலைவர் வீரப்ப மொய்லி

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலின்போது மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் 
மம்தாவுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும்: காங்கிரஸ்  மூத்த தலைவர் வீரப்ப மொய்லி


பெங்களூரு: மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலின்போது மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி புதன்கிழமை தெரிவித்தார். மேலும் அவர், தேர்தல் பின்னடைவுகளை சமாளிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்  கூறினார்.
இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் தேர்தலின்போது இடதுசாரிகள் மற்றும் இந்திய மதச்சார்பற்ற அணியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. இந்த தவறான கூட்டணித் தேர்வால் தேர்தலில் காங்கிரஸ் முழுமையாகத் தோல்வியைத் தழுவ நேரிட்டது. திரிணமூல் காங்கிரûஸ துவங்குவதற்கு முன் மம்தா, காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். முன்னதாக அவர் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனது கட்சியில் இணைத்துக் கொண்டபோதிலும் அவருடன் காங்கிரஸ் சிறப்பான கூட்டணித் தொடர்பு வைத்திருந்தது. நமது பெண் அவர் (மம்தா) தான்.  மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை அவர் பாஜகவுக்கு எதிராகவே மோதிய நிலையில், காங்கிரஸின் சரியான கூட்டணியாக மம்தா தான் இருந்திருப்பார்.
அதுபோல தேர்தல் நடைபெற்ற அஸ்ஸôம், கேரளம் மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதிலும் காங்கிரஸ் தவறியது குறிப்பிடத்தக்கது. தேர்தல்களில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் அதே தவறுகளை காங்கிரஸ் செய்கிறது.
பல மாநிலங்களில் நிதி திரட்டும் திறன் மற்றும், அவர்களுக்குரிய ஜாதிகளை அணி திரட்டுவதில் உள்ள திறமையைப் பொருத்து கட்சி தலைவர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். இத்தேர்தலில் காங்கிரஸ் இதுபோல முடிவுகளைப் பெறும் என்று நான் நினைக்கவில்லை.
மத்தியில் தலைமை தாங்கும் தேசிய கட்சிகளைப் பார்த்து மக்கள் நீண்டகாலம் வாக்களிக்கப் போவதில்லை. மாறாக, அவர்கள் தங்கள் முதல்வர் வேட்பாளரைத் தெரிந்துகொள்ளவே விரும்புகின்றனர்.
உதாரணமாக கேரளத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் காங்கிரஸ் குழப்பத்தில் இருந்தது. இறுதியில் மக்கள், பினராயி விஜயனை முதல்வராகத் தேர்வு செய்தனர்.
அஸ்ஸôமிலும், முதல்வர் வேட்பாளருக்கான முகங்களை காங்கிரஸ் கண்டறியவில்லை. தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
புதுச்சேரியிலும் திமுகவுக்கு பல தொகுதிகளை காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது. நடந்து முடிந்த மாநிலங்களின் தேர்தல் பின்னடைவுகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் அளவிலும், மாநில காங்கிரஸ் அளவில் சிலர் பொறுப்பேற்றிருக்க வேண்டும்.
இவ்விரு நிலைகளிலும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிலிருந்து சரியாக தேர்தல் மேலாண்மை இயந்திரம் நிர்வகிக்கப்படவில்லை. உடனடி நடவடிக்கைகளால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும்.  பாஜக போல வலுவான ஆளும் கட்சியைச் சமாளிக்க நாம் பிராந்திய தலைமைத்துவத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com