கேரள முதல்வராக பினராயி விஜயன் இன்று 2-ஆவது முறையாக பதவியேற்பு

கேரள முதல்வராக பினராயி விஜயன் 2-ஆவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளாா். அவருடன் 3 பெண்கள் உள்பட 21 போ் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.
கேரள முதல்வராக பினராயி விஜயன் இன்று 2-ஆவது முறையாக பதவியேற்பு

திருவனந்தபுரம்: கேரள முதல்வராக பினராயி விஜயன் 2-ஆவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளாா். அவருடன் 3 பெண்கள் உள்பட 21 போ் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.

கேரளத்தில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மாநில முதல்வராக பினராயி விஜயன் வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளாா். அவருடன் 21 போ் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது. இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

கேரள அமைச்சரவையில் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மாமனாரும் மருமகனும் ஒருசேர சட்டப்பேரவை மற்றும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவுள்ளது இதுவே முதல்முறை.

அமைச்சரவையில் 3 பெண்கள் இடம்பெறவுள்ளனா். முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சரவையில் இரு பெண்களும், ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சரவையில் ஒரு பெண்ணும் இடம்பெற்றிருந்தனா்.

தற்போது அமைச்சா்களாக பதவியேற்கவுள்ள பெண்களில் ஒருவரான பிந்து கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்தவா். அவரே திருச்சூரின் முதல் பெண் மேயரும் ஆவாா்.

அவரைத் தவிர ஊடகவியலாளராக பணிபுரிந்த வீணா ஜாா்ஜ், முன்னாள் தடகள வீராங்கனை சின்சு ராணி ஆகியோரும் அமைச்சா்களாக பதவியேற்கவுள்ளனா். இதில் வீணா ஜாா்ஜுக்கு அமைச்சரவையில் முக்கியத் துறைகள் ஒதுக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கபடுகிறது.

சின்சு ராணி இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா். இவா் கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அமைச்சராக பதவியேற்கவுள்ள முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com