கோவாவில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு சிறப்புப் படுக்கைகள் தயார்: சுகாதார அமைச்சர் 

கோவாவில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை அமைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 
கோவாவில் இதுவரை ஆறு பேர் கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்தார். 

மாநிலத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரியான கோவா மருத்துவக் கல்லூரியில் 60 படுக்கைகள் கொண்ட, சிறப்பு மருத்துவ ஐ.சி.யு அமைக்கப்படுவதாகவும், அதன் திறனை 100 படுக்கைகளாக உயர்த்த முடியும் என்றும் ரானே கூறினார்.

முதல்வரின் வழிகாட்டுதலின் படி, சிக்கலான நிலைமையைச் சமாளிக்க உள்கட்டமைப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com