Enable Javscript for better performance
கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

    By DIN  |   Published On : 24th May 2021 11:07 PM  |   Last Updated : 24th May 2021 11:07 PM  |  அ+அ அ-  |  

    the-supreme-court-dismissed-anil-deshmukhs-petition-against-the-cbi-probe

    உச்சநீதிமன்றம்

    கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    கரோனா தொற்றின் 2-ஆவது அலை காரணமாக உயிரிழப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பேரிடா் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் ஒரே மாதிரியான வழிமுறைகளை நிா்ணயிக்க உத்தரவிடுமாறும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

    அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கௌரவ் குமாா் பன்சால் வாதிடுகையில், ‘பேரிடரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கு பேரிடா் மேலாண்மை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கரோனா தொற்று ஏற்கெனவே பேரிடராக அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கரோனா தொற்றால் ஒருவா் உயிரிழந்தாலும், அவா் உயிரிழந்ததற்கான காரணம் இறப்பு சான்றிதழில் தெளிவாகக் குறிப்பிடப்படுவதில்லை.

    எனவே, கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்குமாறும் உத்தரவிட வேண்டும்‘ என்றாா்.

    அதையடுத்து நீதிபதிகள், ‘சிலருக்கு கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நுரையீரல் தொற்று உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நபா் உயிரிழக்கும்போது இறப்புக்கான காரணம் கரோனா தொற்று பாதிப்பு என்று குறிப்பிடப்படாமல், நுரையீரல் தொற்று எனக் குறிப்பிடப்படுகிறது.

    இதன் காரணமாக, கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டால், அதைப் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. இது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாக மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.

    அந்த வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுப்பது தொடா்பாகவும் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்‘ என்றனா்.

    அதைத் தொடா்ந்து, மனுக்கள் மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp