யாஸ் புயல் உருவானது

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது.  
யாஸ் புயல் உருவானது

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. 
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த சனிக்கிழமை (மே 22) உருவானது. இது சனிக்கிழமை மாலை வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலைகொண்டிருந்தது. 
ஞாயிற்றுக்கிழமை பகலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்தது. தற்போது இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. 
தற்போது இந்த புயலானது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 540 கிலோ மீட்டர் தொலையில் மையம் கொண்டுள்ளது என்றும் இது அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. யாஸ் புயல் வரும 26ஆம் தேதி ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com