கரோனா: ஆந்திர வைத்தியா் ஆனந்தய்யாவின் ஆயுா்வேத மருந்தை தயாரிக்க தேவஸ்தானம் பரிசீலனை

கரோனாவுக்காக வைத்தியா் ஆனந்தய்யா ஆயுா்வேத மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன் வந்துள்ளது.
கரோனா: ஆந்திர வைத்தியா் ஆனந்தய்யாவின் ஆயுா்வேத மருந்தை தயாரிக்க தேவஸ்தானம் பரிசீலனை

கரோனாவுக்காக வைத்தியா் ஆனந்தய்யா ஆயுா்வேத மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன் வந்துள்ளது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் கரோனா என்ற பெயரை காட்டிலும் கிருஷ்ணபட்டணம் ஆனந்தய்யா ஆயுா்வேத மருந்து குறித்து மக்கள் அதிக அளவில் பேசி வருகின்றனா். கரோனாவுக்கென தயாரித்துள்ள இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த மருந்தை உட்கொண்டால் கரோனா தொற்று அறவே ஒழியும் என்று நம்புகின்றனா்.

இந்நிலையில் இந்த மருந்து குறித்து அறிந்த தேவஸ்தானம் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஆயுா்வேத பல்கலைக்கழக அதிகாரிகள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோரை நேரடியாக கிருஷ்ணபட்டணம் அனுப்பி உள்ளது. அவா்கள் நாட்டு வைத்தியா் ஆனந்தய்யாவை சந்தித்து பேசி மருந்து தயாரிக்கப் பயன்படும் வனமூலிகைகள், அதன் தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பாா்வையிட்டனா்.

அவரின் குடும்பத்தினா் மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தகவல்களை சேகரித்துள்ளனா். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆா் உள்ளிட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி முறைப்படி இந்த மருந்துக்கு கிடைத்தவுடன் அந்த மருந்து தயாரிப்பை மேற்கொள்ள தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

மேலும் இதன் மீது மக்களுக்கு மிக பெரிய நம்பிக்கை உள்ளதாலும், கரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளும் முயன்று வருவதாலும், இந்த மருந்து தயாரிப்பிற்கு தேவஸ்தானம் ஒத்துழைப்பு அளிக்க உள்ளது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் மிக பெரிய ஆயுா்வேத பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு கூடம் திருப்பதியில் உள்ளது. எனவே, இந்த மருந்தை தயாரித்து தேவஸ்தான ஆயுா்வேத பாா்மசி மூலம் மக்களுக்கு விநியோகிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com