18+ வயதினருக்கு தடுப்பூசி: தெலங்கானா அரசு அனுமதி

தெலங்கானாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

தெலங்கானாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதன்படி, 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 'கோவின்' தளத்தில் பதிவுசெய்வதன் மூலமாக மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, 

மேலும் கோரிக்கைக்கு ஏற்ப பணியிடங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று 45 வயது மேற்பட்டவர்களுக்குக்கான இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான பணிகளும் இன்று தொடங்கியுள்ளன. இதற்கான அனுமதியும் இன்று வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார். 

மேலும், முதல் டோஸ் போட்டுக்கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் இரண்டாம் டோஸ் செலுத்திக்கொள்வது அவசியம் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com