விவசாயிகள் பிரச்னை: மே 30-ல் சந்திரசேகர ராவ் ஆலோசனை

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மே 30-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மே 30-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தெலங்கானாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தும், கரோனா கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

தெலங்கானாவில் மே 12 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் தொற்று பரவல் அதிகரித்து வந்ததால், மே 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 30-ம் தேதி நடைபெறும் ஆலோசனையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.

இதில் விவசாயிகள் பிரச்னை, விளைபொருள்கள், சாகுபடி, விதை கையிருப்பு, உரங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை நிறைவு செய்ததையொட்டி இன்று கருப்பு தினமாக அனுசரித்து விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com