நாட்டில் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

நாட்டில் இதுவரை 11,717 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அனைத்து மாநிலங்களுக்கும் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்கும் 29,250 டோஸ் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் டி.வி. சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களுக்கு சிகிச்சையளிக்க வசதியாக, அந்தந்த மாநிலங்களுக்குத் தேவையான மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிக நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,859 நோயாளிகளும், மகாராஷ்டிரத்தில் 2,770 நோயாளிகளும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com