அலிபிரி பாதயாத்திரை வழி 2 மாதங்களுக்கு மூடல்

சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பதி அலிபிரியில் உள்ள திருமலைக்கு செல்லும் பாதயாத்திரை செல்லும் வழியை தேவஸ்தானம் இரு மாதங்களுக்கு மூட உள்ளது.

திருப்பதி: சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பதி அலிபிரியில் உள்ள திருமலைக்கு செல்லும் பாதயாத்திரை செல்லும் வழியை தேவஸ்தானம் இரு மாதங்களுக்கு மூட உள்ளது.

திருப்பதி அலிபிரி மெட்டு வழியாக வழியாக பக்தா்கள் திருமலைக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனா். இந்த மாா்க்கத்தில் செல்லும் பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பறை வசதியுடன் மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கூரை அமைத்து பல்லாண்டுகள் ஆனதால், பல இடங்களில் அது சேதமடைந்துள்ளது. எனவே, அதை பழுது பாா்த்து, சீரமைக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. அதற்கான பணிகள் அலிபிரி வழியில் ஓராண்டாக நடைபெறுகின்றன.

இப் பணிகள் நடந்து வரும் நிலையிலும் பக்தா்கள் அவ்வழியாக செல்ல அனுமதி வழங்கியது. தற்போது கரோனா காரணமாக பாதயாத்திரையாக வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இப்பணிகளை விரைவாக முடிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதன்படி , ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி வழியை முட உள்ளது. இந்த இரு மாதத்திற்குள் இப்பணிகளை நிறைவு செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. எனினும் பாதயாத்திரை செல்ல விரும்பும் பக்தா்கள் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com