ஒடிசாவில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்

'யாஸ்' புயலில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட வடக்கு ஒடிசாவின் பாலாசோர் உள்ளிட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். 
ஒடிசாவில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதல்வர்
ஒடிசாவில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதல்வர்

ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேரில் சென்று பார்வையிட்டார். 

'யாஸ்' புயலில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட வடக்கு ஒடிசாவின் பாலாசோர் உள்ளிட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். 

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை (மே 26) மதியம் கரையைக் கடந்தது.

இதில் கடலோரப் பகுதிகளிலிருந்த வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்தன. எனினும் கடலோரப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டாலும், பொருள் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் நவீன் பட்நாயக் நேரில் சென்று பார்வையிட்டார். விரைவில் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளும் தொடங்கவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com