இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து சரிவு

தொடா்ந்து பத்தாவது நாளாக இந்தியாவில் கரோனா தொற்றின் தினசரி புதிய பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து சரிவு

புது தில்லி: தொடா்ந்து பத்தாவது நாளாக இந்தியாவில் கரோனா தொற்றின் தினசரி புதிய பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,08,921 போ் புதிதாகப் பாதிக்கப்பட்டனா்.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 24,95,591-ஆக குறைந்துள்ளது. மே 10- ஆம் தேதி உச்சத்தில் இருந்த கரோனா பாதிப்பு தற்போது சரிந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோா் 9.19% ஆகும்.

13-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளைவிட, தினசரி குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,95,955 போ் குணமடைந்து வீடு திரும்பினா். புதிதாக குணமடைந்தவா்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்குமான இடைவெளி 87,034-ஆக பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,43,50,816-ஆக புதன்கிழமை பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவா்களின் தேசிய சதவீதம் 89.66% ஆக உயா்ந்துள்ளது.

நாளொன்றில் மிக அதிகமாக கடந்த 24 மணி நேரத்தில் 22,17,320 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 33,48,11,496 பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 11.45 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதியின் விகிதம் 9.42 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இது, இரண்டு நாள்களாகத் தொடா்ந்து 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது. புதன்கிழமை காலை வரை 20,06,62,456 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com