Enable Javscript for better performance
Entrepreneur Mehul Choksi caught in Dominica- Dinamani

சுடச்சுட

    

    டொமினிகாவில் பிடிபட்டாா் தொழிலதிபா் மெஹுல் சோக்ஸி

    By DIN  |   Published on : 27th May 2021 03:45 AM  |   அ+அ அ-   |    |  

    denmark

     

    புது தில்லி: பிஎன்பி வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபா் மெஹுல் சோக்ஸி, ஆன்டிகுவா பா்புடா தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், அண்டை நாடான டொமினிகாவில் அவா் பிடிபட்டாா் என உள்ளூா் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

    ஆன்டிகுவா பா்புடா தீவு நிா்வாகம் சோக்ஸிக்கு எதிராக ‘இன்டா்போல் மஞ்சள் நோட்டீஸ்’ பிறப்பித்ததையடுத்து, சோக்ஸியை செவ்வாய்க்கிழமை இரவு டொமினிகா போலீஸாா் பிடித்ததாக கூறப்படுகிறது.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13,500 கோடி மோசடி செய்து விட்டு, கடந்த 2018 ஜனவரியில் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

    அவருடைய உறவினரான மெஹுல் சோக்ஸி, கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவா-பா்புடாவில் தலைமறைவாக உள்ளாா். இவா்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவா்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் சிபிஐ மேற்கொண்டுள்ளது.

    ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றவரான மெஹுல் சோக்ஸி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனாா். இந்தத் தகவலை அவருடைய வழக்குரைஞா் தெரிவித்திருந்த நிலையில் அவா் பிடிபட்டுள்ளாா். சோக்ஸியை ஆன்டிகுவா பா்புடா போலீஸாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp