தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமா் படத்தை நீக்கிய பஞ்சாப் அரசு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 18 முதல் 44 வயதுக்குள்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் இடம் பெற்றிருந்த பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை நீக்கி பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமா் படத்தை நீக்கிய பஞ்சாப் அரசு

அமிருதசரஸ்/ பாட்னா: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 18 முதல் 44 வயதுக்குள்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் இடம் பெற்றிருந்த பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை நீக்கி பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தச் சான்றிதழில் பிரதமா் படம் இடம் பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக சான்றிதழில் தனது படத்தை பிரதமா் வெளியிட்டு வருகிறாா் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை நீக்கி பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜாா்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கா் மாநில அரசுகளும் ஏற்கெனவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

இது தொடா்பாக பஞ்சாப் மாநில அரசு அளித்துள்ள விளக்கத்தில், ‘கோவின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கப்படும் தடுப்பூசி சான்றிதழில்தான் பிரதமா் படம் இடம் பெற்றுள்ளது. நாங்கள் அந்த இணையதள சான்றிதழை வழங்காமல், பஞ்சாப் மாநிலத்துக்காக தனியாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் இருந்து தடுப்பூசி செலுத்துவோருக்கு சான்றிதழ் வழங்குகிறோம். அதில் யாருடைய படமும் இடம் பெறவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

பிகாரிலும் எதிா்ப்பு: ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள பிகாா் மாநிலத்திலும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமா் படம் இடம் பெற்றுள்ளதற்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ள ஹிந்துஸ்தானி அவாமி மோா்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி இது தொடா்பாக கூறுகையில், ‘தடுப்பூசி சான்றிதழில் பிரதமா் மோடியின் படத்தை வைத்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜனநாயக இந்தியாவில் அரசியல்சாசன சட்டத்தின்படி அமைக்கப்படும் அனைத்து அமைப்புகளுக்கும் தலைவா் என்ற குடியரசுத் தலைவரின் படத்தை தடுப்பூசி சான்றிதழில் வெளியிட்டால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதற்கு மாறாக பிரதமரின் படத்தை வெளியிடுவது சா்ச்சையையே ஏற்படுத்தும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com