மேக்கேதாட்டு அணை திட்டம்: சட்ட வல்லுநர்களுடன் இன்று முதல்வர் எடியூரப்பா ஆலோசனை

மேக்கேதாட்டு அணை திட்டம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் எடியூரப்பா வியாழக்கிழமை ஆலோசனை நடத்த இருக்கிறார் என உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
மேக்கேதாட்டு அணை திட்டம்: சட்ட வல்லுநர்களுடன் இன்று முதல்வர் எடியூரப்பா ஆலோசனை

பெங்களூரு: மேக்கேதாட்டு அணை திட்டம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் எடியூரப்பா வியாழக்கிழமை ஆலோசனை நடத்த இருக்கிறார் என உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம்  அவர் புதன்கிழமை கூறியதாவது: மேக்கேதாட்டு அணை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக காட்சி ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு ஒரு குழுவையும் அமைத்துள்ளது.
இதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. சட்டரீதியில் சந்திக்கவும், அதற்கான அடிப்படைப் பணிகளை செய்து முடிவெடுக்கவும்  பெங்களூரில் சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் எடியூரப்பா வியாழக்கிழமை (மே 27)  ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அரசின் தலைமை வழக்குரைஞர், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர், மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப்பகிர்வு தொடர்பான சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட முக்கியமானோர் கலந்து கொள்வர்.
மேக்கேதாட்டு அணை திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களையும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே அளித்திருக்கிறோம். இச் சூழ்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக் குழு அமைத்திருப்பது சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்தெல்லாம் ஆராய்ந்து, சட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com