ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் சிகிச்சை வழங்கும் இணையதளம் தொடக்கம்

ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையதளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.
ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் சிகிச்சை வழங்கும் இணையதளம் தொடக்கம்
ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் சிகிச்சை வழங்கும் இணையதளம் தொடக்கம்


புது தில்லி: ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.

ஆன்லைன் மூலம் புறநோயாளிகளாக ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவ வீரர்களும், மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற வழிவகை செய்யும் இந்த இணையதளம் மூலம், மருத்துவமனைகளில் அதிகமானோர் குவிவது தடுக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

இதுபோன்றதொரு மிக இக்கட்டான சூழ்நிலையில், ராணுவ வீரர்களின் நலனை உறுதி  செய்யும் இதுபோன்றதொரு சேவை மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றிலிருந்து நாடு விடுபட, ராணுவப் படையின் பங்களிப்பு மிகச் சிறந்தது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com