மிக அவசர வழக்குகளை விடுமுறைக் கால அமா்வுகள் முன்பாக பட்டியலிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மிக அவசர வழக்குகளை விடுமுறைக் கால அமா்வுகள் முன்பு பட்டியலிடுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மிக அவசர வழக்குகளை விடுமுறைக் கால அமா்வுகள் முன்பாக பட்டியலிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புது தில்லி: மிக அவசர வழக்குகளை விடுமுறைக் கால அமா்வுகள் முன்பு பட்டியலிடுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்துக்கு மே 10 முதல் ஜூன் 28 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, இந்தக் கோடை விடுமுறை காலத்தில் மிக அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பது தொடா்பான உத்தரவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அண்மையில் பிறப்பித்தாா். இதுதொடா்பாக சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

அதில், உச்சநீதிமன்ற கோடை விடுமுறை காலத்தில் மே 26 முதல் ஜூன் 2 வரை மிக அவசர வழக்குகளை விசாரிக்க இரண்டு அமா்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் முதல் அமா்வில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், அனிருத்தா போஸ் ஆகியோரும், இரண்டாவது அமா்வில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூரிய காந்த் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா். இதில், இரண்டாவது அமா்வில் மே 29-ஆம் தேதி முதல் நீதிபதி சூரிய காந்த்துக்குப் பதிலாக நீதிபதி கிருஷ்ண முராரி இடம்பெறுவாா்.

அந்த வகையில், வழக்குரைஞா்கள் அல்லது நேரடியாக மனுதாராா் சாா்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் முக்கியமானவை இந்த விடுமுறைக் கால அமா்வுகள் முன்பு பட்டியலிடப்படும். அவ்வாறு தங்களுடைய வழக்குகள் விடுமுறைக் கால அமா்வு முன்பு பட்டியலிடப்பட வேண்டும் என்று விரும்புபவா்கள் அவசர வழக்கு என்பதற்கான உரிய காரணத்துடன் ம்ஹண்ப்ற்ா்:ம்ங்ய்ற்ண்ா்ய்.ள்ஸ்ரீஃள்ஸ்ரீண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்‘ம்ங்ய்ற்ண்ா்ய்.ள்ஸ்ரீஃள்ஸ்ரீண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியில் கோரிக்கையை அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com