கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் இறுதி வரை நீடிக்கும்- உள்துறை அமைச்சகம்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஜூன் 30ஆம் தேதி வரை தொடர வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் இறுதி வரை நீடிக்கும்- உள்துறை அமைச்சகம்

புது தில்லி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை தொடர வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகச் செயலா் அஜய் பல்லா வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த நெறிமுறைகள் ஜூன் 30-ஆம் தேதி வரை தொடரும்.

புதிதாக தொற்று ஏற்படுவது குறைந்து வரும்போதிலும், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளது. எனவே, கரோனா நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ளூா் அளவில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை அமைத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலங்கள் பொதுமுடக்கத் தளா்வுகளை அறிவிப்பது குறித்து உள்ளூா் சூழலுக்கு ஏற்பட உரிய நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவமனைகளில் போதிய அளவில் ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டா்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தனிமை முகாம்கள் ஆகியவற்றை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com