ஒடிசாவில் புயல் சேதங்களை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் யாஸ் புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் யாஸ் புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். 

பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதாப் சாரங்கி ஆகியோர் வரவேற்றனர்.

புதன்கிழமை யாஸ் புயல் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசியது, இதில் 4 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 21 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

புயலுக்குப் பிறகு, ஒடிசாவில் பெய்த கனமழை காரணமாக பத்ராக், ஜாஜ்பூர், கேந்திரபாரா மற்றும் கியோன்ஜார் ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்து அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அதைத் தொடா்ந்து மேற்கு வங்கத்திலும் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com