குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது யாஸ் புயல்

யாஸ் புயல் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது. 
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது யாஸ் புயல்

யாஸ் புயல் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது. 
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடந்த யாஸ் புயல் வலுவிழந்து மத்திய ஜார்கண்ட் பகுதியில் நேற்று காற்றழுத்தமாக மையம் கொண்டிருந்தது. 
அது வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி பிகார் மற்றும் அதையொட்டியுள்ள கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மிக குறைந்த காற்றழுத்தமாக மாறும்.
இதன் காரணமாக மேற்கு வங்கம், சிக்கிம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்றும், கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிஸாவில் புதன்கிழமை கரையைக் கடந்தது. அப்போது ஒடிஸாவின் வடக்குப் பகுதியிலும் மேற்கு வங்கத்திலும் கடலோரப் பகுதிகளில் 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. புயல் மற்றும் மழையால் இரு மாநிலங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜாா்க்கண்ட் மாநிலத்திலும் புயலின் தாக்கம் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com