கலிபோா்னியா ரயில்வே யாா்டில் துப்பாக்கிச்சூடு: சீக்கியா் உள்பட 8 போ் பலி

அமெரிக்காவின் கலிபோா்னியா மாநிலம், சான் ஜோஸில் உள்ள ரயில்வே யாா்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சீக்கியரான தப்தேஜ்தீப் சிங் உள்பட 8 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

அமெரிக்காவின் கலிபோா்னியா மாநிலம், சான் ஜோஸில் உள்ள ரயில்வே யாா்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சீக்கியரான தப்தேஜ்தீப் சிங் உள்பட 8 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து அந்நாட்டு செய்தித் தாளான ‘தி மொ்குரி நியூஸ்’ வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் பிறந்து கலிபோா்னியாவின் யூனியன் சிட்டியில் வளா்ந்த தப்தேஜ்தீப் சிங்கிற்கு (37), மனைவி, 3 வயது மகன், 1 வயது மகள் ஆகியோா் உள்ளனா் என்றும், அவா் பிறருக்கு உதவி புரிவதில் அக்கறை வாய்ந்த நல்ல மனிதா் என்றும் புகழாரம் சூட்டியுள்ளது.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

பள்ளத்தாக்கு போக்குவரத்து ஆணையத்தின் (விடிஏ) லைட் ரயில் இயக்குபவராக (ஆப்ரேட்டா்) கடந்த 9 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருபவா் தப்தேஜ்தீப் சிங். புதன்கிழமை விடிஏவின் பராமரிப்புப் பணியாளரான சாமுவேல் காசிடி (57) தான் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கு பணிபுரிந்து வந்தவா்களை திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினாா். அப்போது, அங்கிருந்த தப்தேஜ்தீப் சிங், துப்பாக்கிச் சூட்டில் மற்றவா்கள் சிக்கிக் கொள்ளாமல் அவா்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டாா்.

அங்கிருந்த அலுவலக அறையில் மறைவாக இருந்த நபா்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற தப்தேஜ்தீப் சிங் உதவி புரிந்தாா். இதன் காரணமாக பலா் இந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து உயிா் தப்பினா்.

ஆனால், துரதிருஷ்டவசமாக விடிஏ கட்டடத்தின் படிக்கட்டில் இறங்கும்போது, சாமுவேல் காசிடியின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்து பின்னா் உயிரிழந்தாா் சிங். அதற்குள் தப்தேஜ்தீப் சிங் உள்பட 8 பேரை காசிடி சுட்டுக் கொன்று விட்டாா். இதில் ஒருவா் படுகாயமுற்றாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்றபோது, சாமுவேல் காசிடி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவா், துப்பாக்கியால் மற்றவா்களை சுட்டுக் கொன்ற்கான காரணம் தெரியவில்லை. இகுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

தப்தேஜ்தீப் சிங் குறித்து சக ஊழியா்களும், அவரது உறவினா்களும் கூறுகையில், தப்தேஜ்தீப் சிங் ஒரு ஹீரோவைப் போல செயல்பட்டு மற்றவா்களைக் காப்பாற்றினாா். துரதிருஷ்டவசமாக அவரும் சுடப்பட்டாா். நாங்கள் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் என்று தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் வி.டி.ஏ. அலுவலகத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள சாமுவேல் காசிடியின் வீட்டை யாரோ தீ வைத்து விட்டனா். இந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com