வாட்ஸ்ஆப் புதிய விதிகள் என்று பரவும் தகவல்கள் அனைத்தும் பொய்

வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்களுக்கு இனி மூன்று டிக் வரும், வாட்ஸ்ஆப்பில் நாம் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்ற தகவல்கள் அனைத்தும் பொய்யான தகவல்கள்.
வாட்ஸ்ஆப் புதிய விதிகள் என்று பரவும் தகவல் அனைத்தும் பொய்
வாட்ஸ்ஆப் புதிய விதிகள் என்று பரவும் தகவல் அனைத்தும் பொய்


வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்களுக்கு இனி மூன்று டிக் வரும், வாட்ஸ்ஆப்பில் நாம் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்ற தகவல்கள் அனைத்தும் பொய்யான தகவல்கள்.

அதாவது, கடந்த சில நாள்களாக, நாளை முதல் வாட்ஸ்ஆப் செயலியில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன என்று கூறி, கீழ்க்கண்ட இந்த தகவல்கள் வேகமாகப் பரவி வருகிறது. இதில் எதிலும் உண்மையில்லை என்பதுதான் உண்மை.

அதாவது, அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும்.
பதிவான அழைப்புகள் அனைத்தும் சேமிக்கப்படும்.
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்படும் என்பது முதல்.. 


தகவல் அனுப்பினால் ஒரு டிக்
தகவல் சென்று சேர்ந்துவிட்டால் இரண்டு டிக் என்ற தகவல்கள் மற்றும்

தகவலுக்கு மூன்று சிவப்பு டிக் வந்தால் அதன் மீது அரசு நடவடிக்க எடுக்கிறது, விரைவில் நீதிமன்ற சம்மன் வரும் என்பது வரை அனைத்தும் தவறான தகவல்கள். இதில் எந்த அளவுக்கும் உண்மையில்லை.

வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அனைவருக்கும், ஒரு விஷயம் மட்டும் உண்மை. இவ்வாறு வரும் அனைத்துத் தகவல்களும் பொய். வாட்ஸ் ஆப் அழைப்புகளையோ, தகவல்களையோ மத்திய அரசு கண்காணிக்காது. இது எப்போதும் அனுப்புனர் மற்றும் பெறுநருக்கு மட்டுமே தெரிந்த தகவலாகவே இருக்கும். அழைப்பாகவே இருக்கும்.

புதிய தகவல்தொழில்நுட்ப சட்டம் 2021- இதுபோன்ற போலியான தகவல்களை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பொய்யான தகவல் பரப்பப்படும்போது, அந்த பொய்யான தகவலை முதல் முதலாக பரப்பியவர் யார், அந்த தகவலை உருவாக்கியவர் யார் என்பதை கண்டறிய அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளது. ஆனால், அதுபோன்ற அனுமதியை வழங்க முடியாது என்றும், இது எங்கள் பயனாளர்களின் தனியுரிமையை பாதிக்கும் என்றும் கூறி, வாட்ஸ்ஆப் நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ஆனால் அதற்குள் நாளை முதல் புதிய விதிகள் என்ற ஒரு பொய்ச் செய்தி வாட்ஸ்ஆப்பில் வலம் வரத் தொடங்கிவிட்டது. அதையும் உண்மையா என்பதை அறியாமலேயே சிலர் பலருக்கோ அல்லது சிலருக்கோ ஃபார்வேர்ட் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே, வாட்ஸ்ஆப்பில் எந்தத் தகவல் வந்தாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அப்படியே ஃபார்வேர்ட் செய்யும் பழக்கத்தை கைவிடுவதே ஆகச் சிறந்த செயலாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com