இறந்தவரின் உடலை நடைபாதையில் கிடத்திவிட்டுச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கைது

கூடுதல் பணம் கொடுக்க மறுத்ததால், கரோனா தொற்றால் இறந்தவரின் உடலை நடைபாதையில் கிடத்திவிட்டுச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கூடுதல் பணம் கொடுக்க மறுத்ததால், கரோனா தொற்றால் இறந்தவரின் உடலை நடைபாதையில் கிடத்திவிட்டுச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூருவைச் சோ்ந்தவா் சரத். ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவா், அண்மையில் பெங்களூரில் கரோனா தொற்றால் மருத்துவமனையில் இறந்த ஒருவரின் உடலை, ஹெப்பாளில் உள்ள இடுக்காட்டிற்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றுள்ளாா். வழியில் இறந்தவரின் உறவினா்களிடம், ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ. 18 ஆயிரம் கேட்டுள்ளாா். அவா்கள் கொடுக்க மறுக்கவே, ஆம்புலன்ஸிலிருந்து இறந்தவரின் உடலை இறக்கி, சாலையோர நடைபாதையில் கிடத்திச் சென்றுள்ளாா்.

இது குறித்து உறவினா்கள் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த அம்ருத்தள்ளி போலீஸாா், சரத்தைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com