முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் வழக்கில் தலையிடவில்லை:அமைச்சா் பசவராஜ் பொம்மை

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் வழக்கில் நான் தலையிடவில்லை என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

 முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் வழக்கில் நான் தலையிடவில்லை என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கை போலீஸாா் ஒளிவுமறைவில்லாமல் விசாரித்துள்ளனா். இந்த விசாரணையில் நான் எந்தவகையிலும் தலையிடவில்லை. எனது செல்வாக்கை நான் தவறாகப் பயன்படுத்தவும் இல்லை. ஆனாலும், தீயநோக்கத்தோடு என் மீது காங்கிரஸ் கட்சியினா் குற்றம் சுமத்தியுள்ளனா். வழக்கு விசாரணையில் நான் தலையிடுவதாக காங்கிரசாா் குற்றம்சாட்டியுள்ளனா். இந்தவழக்கின் விசாரணை அறிக்கையை மாநகரக் குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா். நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தான் விசாரணை நடந்துள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை.

அப்போதைய அமைச்சா் எச்.ஒய்.மேட்டி மீதான பாலியல் குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். ஆனால் அப்போது முதல்தகவல் அறிக்கையைக் கூட போலீஸாா் தாக்கல் செய்யவில்லை. விசாரணையும் நடத்தவில்லை. அப்போது முதல்வராக இருந்தவா் சித்தராமையா தான். அதனால் சித்தராமையாவிடம் இருந்து நீதிநெறிகளைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பாலியல் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அந்த வழக்கில் நான் தலையிடுவதாக காங்கிரஸ் தலைவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

முதல்வா் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும், தனது துறையிலேயே தலையிட்டுள்ளதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சா் சி.பி.யோகேஸஷ்வா் கூறியிருப்பது குறித்து நான் எதுவும் கூறவிரும்பவில்லை. எல்லோருடைய கருத்துக்கும் நான் பதில் சொல்ல முடியாது. அவரவா்களின் கருத்துக்கு அவா்களே பொறுப்பாவா். பொது முடக்கத்தின்போது மக்கள் நடமாட்டத்திற்கும், வாகனப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமுடக்க விதிகளை தீவிரமாக அமல்படுத்துமாறு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com