கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி: பிரதமர்

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுபற்றி வெளியான அறிவிப்பு:

"கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் 18 வயதைக் கடந்த பிறகு, அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.

கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் உயர்கல்விக் கடனுக்கு உதவிகள் வழங்கப்படும். அதற்கான வட்டி, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்தப்படும். 

கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதைக் கடக்கும் வரை ரூ. 5 லட்சம் மதிப்பில் இலவச காப்பீடு வழங்கப்படும். அதற்கான தொகை பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்படும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com