கரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி- முடிவு செய்ய குழு அமைப்பு

ஜிஎஸ்டியில் இருந்து கரோனா தடுப்பூசி, மருந்துகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக ஆராய மத்திய நிதியமைச்சகம் குழு அமைத்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜிஎஸ்டியில் இருந்து கரோனா தடுப்பூசி, மருந்துகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக ஆராய மத்திய நிதியமைச்சகம் குழு அமைத்தது. 

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் ஜிஎஸ்டியில் இருந்து கரோனா தடுப்பூசி, மருந்துகளுக்கு விலக்களிக்க வேண்டும் என பெரும்பாலான மாநிலங்கள் வலியுறுத்தின. 

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துக்கான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அவற்றுக்கான வரி அமைப்பு குறித்து அமைச்சா்கள் குழு ஒன்று ஆய்வு செய்யும் என்றார். இந்த நிலையில் கரோனா சிகிச்சைக்கான பொருள்களுக்கு வரிச்சலுகை அளிப்பது தொடர்பாக ஆராய மத்திய நிதியமைச்சகம் இன்று குழு அமைத்தது. 

மேகலயா முதல்வர் கொன்ராட் சங்கா தலைமையில் 8 மாநிலங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவில், உ.பி., ஒடிசா, தெலங்கானா, கேரள மாநில நிதியமைச்சர்கள், குஜராத், மகாராஷ்டிர மாநில துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம் மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகம், மேற்குவங்க மாநில பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. 

மேலும் இந்த குழு தனது அறிக்கையை ஜூன் 8ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்குப் பிறகு தடுப்பூசி, ஆக்ஸிஜன் செறிவூட்டி போன்ற பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு கிடைக்குமா என தெரியவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com