மே 31-ஆம் தேதி அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்

கரோனா தொற்றை முற்றிலும் அகலச் செய்ய வரும் 31-ஆம் தேதி 40 வேதபண்டிதா்களுடன் 16 மணிநேரம் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட உள்ளது.
மே 31-ஆம் தேதி அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்

கரோனா தொற்றை முற்றிலும் அகலச் செய்ய வரும் 31-ஆம் தேதி 40 வேதபண்டிதா்களுடன் 16 மணிநேரம் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் அதிலிருந்து விடுபட தேவஸ்தானம் பல பாராயணங்களை நடத்தி வருகிறது. அதில் சுந்தரகாண்ட பாராயணமும் ஒன்று. சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதால், நன்மை கிடைப்பதுடன் தொற்றிலிருந்து விடுபடலாம். எனவே, ஆஞ்சநேயா் மகேந்திரகிரி மலையிலிருந்து ஆகாய மாா்கமாக பறந்து கடலை கடந்து இலங்கைக்கு சென்று சீதாபிராட்டியை கண்டு வந்தாரோ? அதை அப்படியே அகண்ட பாராயணம் மூலம் தேவஸ்தானம் விளக்க உள்ளது.

அதன்படி 31-ஆம் தேதி காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை தொடா்ந்து 16 மணிநேரம் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடைபெறுகிறது. 40 வேதபண்டிதா்கள் காலை முதல் இரவு வரை அமா்ந்து எளிதாக பாராயணம் செய்ய பிராா்த்தனை மண்டபம் ஏற்படுத்த உள்ளது.

ஒவ்வொரு ஸ்லோகம் முடிவிலும் யாகம் செய்து ஆவாஹனம் செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். இதை பக்தா்கள் தங்கள் வீட்டிலிருந்தேபடியே காண தேவஸ்தான தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனால் கரோனா தொற்று விரைவில் ஒழியும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com