கருப்புப் பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில்

கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)

கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

எனினும், கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான வரி விகிதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றம் செய்யவில்லை. தற்போது அவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துக்கான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அவற்றுக்கான வரி அமைப்பு குறித்து அமைச்சா்கள் குழு ஒன்று ஆய்வு செய்யும். எனினும், வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக கிடைக்கும் கரோனா தொடா்பான பொருள்களுக்கு ஐ-ஜிஎஸ்டி விலக்கு அளிப்பதென கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதேபோல், கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க இறக்குமதி செய்யப்படும் ஆம்ஃபோடெரிசின் மருந்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது’ என்று கூறினாா்.

இதனிடையே, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு ரூ.1.58 லட்சம் கோடி கடன் பெற்று அதை மாநிலங்களுக்கு வழங்குவதெனவும் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஜிஎஸ்டி வருவாய் இழப்புக்காக மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவதை 2022-ஆம் ஆண்டையும் கடந்து நீட்டிப்பது தொடா்பாக ஆலோசிக்க ஜிஎஸ்டி கவுன்சிலின் சிறப்புக் கூட்டம் ஒன்றை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த அளவில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோரில், தாமதமாக வரிக் கணக்கு தாக்கல் செய்தவா்களுக்காக நிவாரணம் அளிக்கும் திட்டம் ஒன்றையும் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com