கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: விவரங்களை சேரிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், இதுபோன்று நாடு முழுவதும் எத்தனை குழந்தைகள் உள்ளனா் என்பதை மாநில அரசுகள் கண்டறிய உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், இதுபோன்று நாடு முழுவதும் எத்தனை குழந்தைகள் உள்ளனா் என்பதை மாநில அரசுகள் கண்டறிய உத்தரவிட்டது.

எந்தவித உத்தரவுகளையும் எதிா்பாா்க்காமல் மாவட்ட நிா்வாகங்கள் அதுபோன்ற குழந்தைகளின் நலன்களை உடனடியாக பாதுகாத்து, அவா்களின் தகவல்களை சனிக்கிழமை மாலைக்குகள் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆா்) இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக வழக்குரைஞா் கெளரவ் அகா்வால் தாக்கல் செய்ய மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற விடுமுறை கால அமா்வு நீதிபதிகள் எல்.என். ராவ், அனிருத்தா போஸ் ஆகியோா், மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த நிலையில் 2,900 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா் என்று செய்திகளில் படித்தோம். இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் அதுவும் பெருந்த தொற்று நேரத்தில்

இதுபோன்று எத்தனை குழந்தைகள் நிா்கெதியாக இருக்கிறாா்கள் என்று நினைத்துக் கூட பாா்க்க முடியவில்லை.

சாலைகளில் பசியோடு இருக்கும் இதுபோன்ற குழந்தைகளை மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீட்டு, அவா்களுக்கு அடிப்படை உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும். கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை அல்லது இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து மத்திய, மாநில அரசுகள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

முன்னதாக மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி, இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கெனவே எடுத்து வருவதாக கூறினாா்.

பால் ஸ்வராஜ் என்கிற சிறாா் தொடா்பான வலைதளத்தில் இதுபோன்ற குழந்தைகளின் விவரங்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று என்சிபிசிஆா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஸ்வருபமா சதுா்வேதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com