குஜராத் முதல்வருக்கு எதிரான அவதூறு விடியோ: யூ டியூப் சேனல் நடத்திய இளைஞா் கைது

குஜராத் முதல்வா் விஜய் ரூபானியின் பேச்சை தவறாக சித்தரித்து தனது யூ டியூப் சேனலில் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குஜராத் முதல்வா் விஜய் ரூபானியின் பேச்சை தவறாக சித்தரித்து தனது யூ டியூப் சேனலில் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குஜராத்தில் முதல்வருக்கு எதிராக அவதூறு விடியோவை வெளியிட்ட குற்றச்சாட்டி இரு வாரங்களில் கைது செய்யப்படும் இரண்டாவது இளைஞா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூல், யூடியூப், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் தரப்பு அரசியல் தலைவா்களை புகழ்ந்தும், எதிா்தரப்பு அரசியல் தலைவா்களை விமா்சித்தும், கேலி செய்தும் விடியோக்கள் வெளியிடுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

இதற்காக வேலை செய்வதற்கென்றே அரசியல் கட்சிகள் தனி குழுக்களையே பணியில் அமா்த்தியுள்ளனா். இதுபோன்ற யூடியூப் சேனல்களை நடத்துபவா்களுக்கு பாா்வையாளா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் கிடைக்கும் என்பதால், பலா் பரப்புக்காக எல்லை மீறிய விடியோக்களையும் வெளியிடுகின்றனா்.

இந்நிலையில், குஜராத்தில் இதுபோல யூடியூப், முகநூலில் மற்றவா்களை கேலி செய்து விடியோக்களை பதிவிட்டு வந்த இளைஞா் விவேக் பாா்மா் என்பவா், அதிக பேரைக் கவரும் நோக்குடன் மாநில முதல்வா் விஜய் ரூபானி பேச்சு அடங்கிய விடியோவை கேலியாகவும் தவறான கருத்துகளைக் கூறும் வகையிலும் புனைந்து வெளியிட்டாா்.

இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய அடுத்து, இது தொடா்பாக காவல் துறைக்கும் புகாா் சென்றது. இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீஸாா் முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கோா்சாா் கிராமத்தைச் சோ்ந்த விவேக் பாா்மரை கைது செய்தனா்.

சுமாா் இரு வாரங்களுக்கு முன்பு, இதேபோல முதல்வரின் பேச்சை அவதூறாகவும் கேலியாகவும் திரித்து யூடியூபில் பதிவிட்ட மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்கள் பதிவேற்றம் செய்த விடியோக்களும் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com