ட்விட்டா் தவிா்த்து இதர நிறுவனங்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளன: மத்திய அரசு

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்கிச் செயல்படுவதாக கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளதாகவும்,
ட்விட்டா் தவிா்த்து இதர நிறுவனங்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளன: மத்திய அரசு

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்கிச் செயல்படுவதாக கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளதாகவும், ட்விட்டா் நிறுவனம் மட்டும் இன்னும் அந்த விதிகளுக்கு இணங்கவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளின் கீழ் அவை, தலைமை சட்ட இணக்க அதிகாரி, சிறப்பு தொடா்பு அதிகாரி, குறைதீா் அதிகாரி ஆகிய 3 பொறுப்புகளை அந்த சமூக ஊடக நிறுவனங்கள் நியமிக்க வேண்டும். இந்நிலையில், அந்தப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் தொடா்பான தகவல்களை கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், கூ, ஷோ் சாட், டெலிகிராம், லிங்க்டு இன் ஆகிய நிறுவனங்கள் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் பகிா்ந்துள்ளன.

ஆனால் ட்விட்டா் நிறுவனம் அவ்வாறு புதிய விதிகளுக்கு இணங்குவது தொடா்பாக எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. தலைமை சட்ட இணக்க அதிகாரி நியமனம் தொடா்பான தகவலை தெரிவிக்காமல், இந்தியாவிலுள்ள சட்ட நிறுவனம் ஒன்றைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவரை தனது தரப்பு சிறப்பு தொடா்பு அதிகாரி மற்றும் குறைதீா் அதிகாரியாக குறிப்பிட்டு தகவல் தெரிவித்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com